பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனை  கன்னத்தில் அறைந்த நபர் கைது செய்யப்பட்டவுடன் மேக்ரோன்ஒழிக  என்று கோஷம்.

உலகம் . June, 10 2021

news-details

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனை  கன்னத்தில் அறைந்த நபர் கைது செய்யப்பட்டவுடன் மேக்ரோன்ஒழிக  என்று கோஷம்.

iTamilworld: 10/6/2021:  பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவல் தணிந்து இயல்புநிலை ஏற்பட்டுக்கொண்டிருக்கும்  இந்தநிலையில்,  2-ம் கட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் பிரான்சிய அதிபர் இமானுவேல் மேக்ரானை,  மர்ம நபர் ஒருவர்  பொது இடத்தில்வைத்துக்  கன்னத்தில் அறையும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் படுவேகமாக  வைரலாகிவருகிறது.பிரான்ஸில் கொரோனா முதலாம் அலை நோய் பாதிப்பும் பரவலும் அதிகமாக இருந்தபோதிலும், முன்னெச்சரிக்கையுடன்  இரண்டாம் அலைக்கு அந்த நாடு தயாராகியுள்ள சூழ்நிலையில், தற்போது பெரும் பாதிப்புகள்  அங்கு தவிர்கப்படிருக்கிறது . அங்கு தற்போது, கொரோனா பரவல் குறைத்திருப்பதால்  மீண்டும் அதன் இயல்புநிலை ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பல கட்டங்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.  அந்தச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் நேற்று முன்தினம் பிரான்ஸின் 'டிரோம்' என்ற  நகருக்குச் சென்றிருந்தார். அங்கே ஹெர்மிடேஜ் நகரில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபின்  வெளிப்பகுதியில்  தன்னைச் சந்திப்பதற்காகக் குழுமியிருந்த மக்கள் கூட்டத்தை நோக்கிச் சென்றார். மக்களிடம் அவர் கருத்துகளைக் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அவரை அணுகி நபர் ஒருவர் பேச முற்பட்டார். அதிபர் இமானுவேலும், அந்த நபரின் அருகில் சென்று அவரிடம் கைகொடுத்தார். பதிலுக்குக் கைகொடுத்த அந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் அதிபரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.அந்த நபரின் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் விரைந்து செயல்பட்டு அந்த நபரை மடக்கிப் பிடித்து அதிபரைப் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்த முயன்றனர். இருப்பினும், அவர் அந்த நபரின் அருகில் சென்றார். போலீஸார் அதிபரின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அங்கிருந்து அவரை அப்புறப்படுத்தினார்கள்.அதிபர் இமானுவேல் மேக்ரானைக் கன்னத்தில் அறைந்த அந்த நபர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து 'இமானுவேல் ஒழிக... இமானுவேல் மேக்ரானின் கொள்கைகள் ஒழிக' என்று அடுத்த சில நிமிடங்களுக்குக் கோஷமிட்டுக்கொண்டிருந்தார். போலீஸார் அதிபரைத் தாக்கிய நபருடன் கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த மற்றொரு நபரையும் கைதுசெய்து வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.