நள்ளிரவில் பயங்கரவாதிகள் அட்டகாசம்; ஒரே கிராமத்தில் 132 பேர் படுகொலை; ஆப்பிரிக்கா நாட்டில் நடந்த கொடுமை.

உலகம் . June, 07 2021

news-details

நள்ளிரவில் பயங்கரவாதிகள் அட்டகாசம்; ஒரே கிராமத்தில் 132 பேர் படுகொலை; ஆப்பிரிக்கா நாட்டில் நடந்த கொடுமை.

iTamilWorld: 6/6/2021:   ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா என்ற நாட்டில் ஃபசோவின் மாநிலத்தின் வட பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் பயங்கரவாத ஆயுதக் குழுவினர் நடத்திய வெறியாட்டத் தாக்குதலில் 132க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களில் நடைபெற்ற தாக்குதல்களில் நடந்த மோசமான தாக்குதல் இது என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஒரே நள்ளிரவில் நடத்தப்பட்ட இந்த மோசமான தாக்குதலில் அக்கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டத்துடன் பல வீடுகள் மற்றும் உள்ளூர் சந்தை என்பன எரிக்கப்பட்டன. இந்தக் கொடுமைகளை ஐ. நா. பொதுச்செயலாளர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.