மலேசிய போர் விமானங்கள் சீன போர் விமானங்களை விரட்ட புறப்பட்டதிகிலூட்டும் செய்தி .

உலகம் . June, 03 2021

news-details

மலேசிய போர் விமானங்கள் சீன போர் விமானங்களை விரட்ட புறப்பட்டதிகிலூட்டும் செய்தி .


iTamilworld: 2/6/2021: மலேசிய நாட்டின் வான் எல்லைக்குள் அத்துமீறிப்  புகுந்த சீன நாட்டின் விமானப்படையின் 16 ஜெட் விமானங்களை  விரட்ட மலேசிய நாட்டின் விமானங்கள் புறப்பட இருந்த சிலதுளி நிமிடங்களுக்குள் அங்கு வடமிட்ட சீன விமானங்கள் மறைத்து விட்டன. தென் சீனக்  கடலில்  அடிக்கடி நடக்கும்  சீனாவின் அத்துமீறல்கள் தொடர்பகப் பல நாடுகளும் கண்டனம் தெரிவிக்கும் அதே வேளையில் சீன தனது இரகசிய அக்கடல் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. சீனாவின் இந்தச்  செயலை மலேசிய விமானப்படை எச்சரிக்கை செய்துள்ளது. இது குறித்து மலேசிய அரசும்  தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. மேலும் சீன அரசிடம் இதற்கான விளக்கத்தைக் கோரியுள்ளது.