அமெரிக்காவில்  கலிஃபோனியா மாநிலத்தில் துப்பாக்கிச் சூடு; எட்டுப் பேர் பலி .

உலகம் . May, 27 2021

news-details

iTamilworld: 26/5/2021: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திலுள்ள பயணிகள் ரயில் நிலைய பணிமனை ஒன்றில் திடீரென நுழைந்த துப்பாக்கிதாரி ஒருவர் அங்குள்ள  தொழிலாளர்கள் மீது சரமாரியாகச் சுட்டதில் எட்டு(8) பேர் அந்த இடத்திலேயே பலியாகினர். இந்த துயர சம்பவம் இன்று புதன் கிழமை காலை 6.45 மணிக்கு நடைபெற்றது. குறித்த நபர் முன்பு அங்கு வேலை செய்தவர் எனவும் இந்த தாக்குதலை மேற்கொள்ளப் புறப்படுமுன்னர் தனது வீட்டைத் தீயிட்டுக்  கொளுத்தியுள்ளார் என்றும்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில்  இந்த வருடத்தில் மட்டும் இதுவரை  230 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்றும் இந்த மே மாதத்தில் மட்டும் 64 சூட்டுச் சம்பவங்கள் நடைபெற்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.