பேரழிவின் விளிம்பில் நிற்கும் இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா முடிவு; மருத்துவ உபகரணங்கள் டில்லியைச் சென்றடைந்தன. 60 மில்லியன் தடுப்பூசிகளும்  செல்லவுள்ளன.அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியப்  பிரதமர் மோடியுடன் தொடர்பு கொண்டு உறுதி.

உலகம் . April, 27 2021

news-details

பேரழிவின் விளிம்பில் நிற்கும் இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா முடிவு; மருத்துவ உபகரணங்கள் டில்லியைச் சென்றடைந்தன. 60 மில்லியன் தடுப்பூசிகளும்  செல்லவுள்ளன.அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியப்  பிரதமர் மோடியுடன் தொடர்பு கொண்டு உறுதி.

iTamilWorld: 26/4/2021:  இந்தியா தற்போது இதுவரை உலகில் எந்தநாடுமே எதிர்கொள்ளாத பேரிடரை எதிர்கொண்டுள்ளது. உலகநாடுகள்  பலவும் இந்தியாவுக்கு உதவி முன்வந்துள்ளன. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியப்  பிரதமர் மோடியைத் தொடர்புகொண்டு உதவ முன்வந்தார். இதன்படி முதற்கட்டமாக பிராணவாயு இயந்திரங்களான ஒக்ஸிசன் கருவிகள் மற்றும் அவசர மருத்துவ உபகரணங்கள் என்பன டெல்லியைச்  சென்றடைந்தன. தொடர்ந்தும் மேலதிகமாக உள்ள 60 மில்லியன் அஸ்ட்ரா செனிக்கா  தடுப்பூசிகளையும்  அனுப்பிவைக்க இருப்பதாக தெரிவிக்கப்படுள்ளது. இதேவேளையில் ஜெர்மனி மற்றும் ஐரோப்பியன் யூனியன் நாடுகளும் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.