இந்தியாவில் போதிய ஒக்ஸிசிசன் இல்லாத காரணத்தினால் ஏப்ரல் 23 ம் திகதிஒரேநாளில் மட்டும்  25 கொரோனா நோயாளிகள் பலி. 

உலகம் . April, 27 2021

news-details

இந்தியாவில் போதிய ஒக்ஸிசிசன் இல்லாத காரணத்தினால் ஏப்ரல் 23 ம் திகதிஒரேநாளில் மட்டும்  25 கொரோனா நோயாளிகள் பலி. 


iTamilWorld: 26/4/2021: இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த ஏப்ரல் 23வெள்ளிக்கிழமை காலை 25 கொரோனா நோயாளிகள் பலியான செய்தி பெரும் சோகமாகவே விடிந்தது.  டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்காராம் மருத்துவமனையிலேயே இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த மருத்துவமனையில் மிகவும் மோசமான நிலையில் கண்காணிக்கப் பட்டுக்கொண்டிருந்த கொரோனா நோயாளிகளுக்கு தீடீரென அதிக அழுத்தத்தில் தொடர்சியாக ஒக்ஸிசிசன் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் போதிய அளவு ஒக்ஸிசன் இல்லாததால் 25 நோயாளிகள் பரிதாபகரமாக உயிரிழந்தனர். தொடர்ந்து இந்தியாவில் கொரோனாத் தொற்றுகளும் ஒக்ஸிசன் பற்றாக்குறையினால் பரிதாப மரணங்களும் சம்பவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.