தாய்வானின் வான்பரப்புக்குள் பறந்த 25 சீனப் போர் விமானங்கள் : பதட்டமாகும் சீன தாய்வான் நாடுகளிடையேயான முறுகல் நிலை.

உலகம் . April, 26 2021

news-details

தாய்வானின் வான்பரப்புக்குள் பறந்த 25 சீனப் போர் விமானங்கள் : பதட்டமாகும் சீன தாய்வான் நாடுகளிடையேயான முறுகல் நிலை.


iTamilWorld: 14/4/2021: தங்களது நாட்டுப் பாதுகாப்பு மண்டல வான் பரப்பில் திடீரென திங்கட்கிழமை சீனாவின் 25 ஜெட் விமானங்கள் பறந்ததாக தைவான் தெரிவித்துள்ளது. அந்த விமானங்கள் அணு ஆற்றல் குண்டுகளை தாங்கிச் செல்லும் திறன் கொண்டவை என்று தைவான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தங்கள் வான் பரப்புக்குள் இவ்வளவு எண்ணிக்கையில் விமானங்களின் ஊடுருவல் நடைபெற்றது, இந்த ஆண்டிலேயே இதுதான் அதிகம். அதுவும் தாய்வான் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பு தொடர்பாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் சீன இந்த நடவடிக்கை மூலம் அமெரிக்காவின் எச்சரிக்கையை அவமதித்துள்ளது. தாய்வான் சீனாவிலிருந்து பிரிந்த ஒரு மாகாணமாகவே சீனா கூறிவருகிறது. அனால், தாய்வானோ தான் இறையாண்மையுள்ள ஜனநாயக நாடென்றே அறிவிக்கிறது.