அமோசான் நிறுவனத்தைத் தகர்க்க முயன்றவர் கைது. அவர் பதிவிட்ட சமூக வலைதளத் செய்தியே கைதுசெய்யக் காரணமாகியது.

உலகம் . April, 26 2021

news-details

அமோசான் நிறுவனத்தைத் தகர்க்க முயன்றவர் கைது. அவர் பதிவிட்ட சமூக வலைதளத் செய்தியே கைதுசெய்யக் காரணமாகியது.iTamilworld: 14/4/2021:
அமெரிக்காவிலுள்ள அமேசான் நிறுவனத்தின் இணை வலை வழங்கி இயங்கும் (வெப் சர்வர்கள் ) தரவுகள் மையத்தை குண்டு வைத்துத் தகர்க்கும் வெறியில் செய்த சதி காரணமாக 28 வயதான சேத் ஆரோன் பென்ட்லே என்பவன், அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பினால் கைது செய்யப்பட்டிருக்கிறான், இந்த தரவு மையத்தை குண்டு வைத்துத் தகர்ப்பதன் மூலம் 70 சதவிகித உலக இணைய செயல்பாட்டை முடக்கிவிடும் விடும் எண்ணத்தில் அவன் இருந்திருக்கிறான் என்று தெரியவருகின்றது.

அவன் பிடிபட்டது ஒரு துப்பறியும் கதையின் பாணியிலேயே உள்ளது. அவன் தனது திட்டம் குறித்து பெண்ட்லே என்ற சமூக வலைத்தளம் ஒன்றில் பதிவிட்டுள்ளான் . இதனை ஒருவர் அமெரிக்க பாதுகாப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவன் வெடிகுண்டு வாங்குவதற்கு ஒரு இரகசிய ஏஜென்ட் ஓரிருவரை சந்தித்த போதே போலீசார் அவனைக் கைது செய்தனர். இவனது குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவன் 20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கவேண்டியிருக்கும்.