அமெரிக்காவில் மருத்துவமனைகளில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : அமெரிக்கா எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்து குறித்து எச்சரிக்கை .

உலகம் . April, 03 2021

news-details

அமெரிக்காவில் மருத்துவமனைகளில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு :
அமெரிக்கா எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்து குறித்து எச்சரிக்கை .


iTamilWorld: 30/3/2021: அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிகள் மிகமிக வேகமாகப் போடப்பட்டுவரும் நிலையிலும் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகள் தொகை மிகவும் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக அமெரிக்கா பெரும் ஆபத்தை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது என ஒரு மூத்த விஞ்ஞானி எச்சரித்துள்ளார். அதிபர் ஜோ பைடன் முக கவசம் அனைவரும் அணியவேண்டிய அவசியத்தை உணர்ந்து கடைபிடிக்குமாறு வேண்டுகோள் விதித்திருந்தார். ஆனாலும் மக்களும் சில மாநிலங்களும் அலட்ச்சியமாக நடப்பதன் காரணமாக கடந்த வாரம் நாளொன்றுக்கு 60, 000 பேர் வீதம் கொரோனாத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.