உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடாக தொடர்ந்து நான்காவது ஆண்டாக, ஃபின்லாந்து; கனடா 11 பிரிட்டன் 17 அமெரிக்கா 19

உலகம் . March, 24 2021

news-details

உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடாக தொடர்ந்து நான்காவது ஆண்டாக, ஃபின்லாந்து; கனடா 11 பிரிட்டன் 17 அமெரிக்கா 19

iTamilWorld: 22/3/2021: உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடாக ஃபின்லாந்து நான்காவது ஆண்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட ஆண்டறிக்கை ஒன்றில் வெளியாகியுள்ள உலக மகிழ்ச்சி அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் இடத்தில் டென்மார்க்கும் மூன்றாம் இடத்தில் சுவிட்ஷர்லாந்தும் நான்காம் ஐந்தாம் இடங்களில் முறையே ஐஸ்லாந்தும் நெதர்லாந்தும் இருப்பது குறிப்பிடத்தக்கது. உலகில் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகள் பற்றிய கணிப்புகள் 149 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் பிரிட்டன் 13 வது இடத்தில் இருந்து 17வது இடத்திற்கு விழுந்துவிட்டது. கனடா 11 வது இடத்திலும் ,அமெரிக்கா 19 வது இடத்திலும் இலங்கை 129 வது இடத்திலும் இந்தியா 139 வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. உலகில் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளில் முதல் 10 இடத்தில் இருக்கும் நாடுகளில் 9 நாடுகள் ஐரோப்பிய நாடுகள் ஆகும்.