சீன இராணுவத்தை உளவு பார்க்கும் டெஸ்லா கார்கள் : சீனா விசனம்: அலென் மாஸ்க் பதில்.

உலகம் . March, 24 2021

news-details

சீன இராணுவத்தை உளவு பார்க்கும் டெஸ்லா கார்கள் : சீனா விசனம்: அலென் மாஸ்க் பதில்.

iTamilWorld: 22/3/2021: டெஸ்லா தயாரித்த மின்சாரக் கார்கள் தங்களை உளவு பார்க்கப் பயன்படுத்தப்படுவதாகக் கூறி சீன இராணுவம் அத்தகைய கார்களுக்கு தடை விதித்துள்ளது. சீன இராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க மின்சாரக் கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைவர் எலான் மாஸ்க் பதிலளித்துள்ளார் . அதில் அவர் தெரிவிப்பதாவது, தங்கள் நிறுவன வாகனங்கள் உளவு பார்க்கும் நோக்கத்தில் தயாரிக்கப் படவில்லை. அப்படி சீனாவை உளவு பார்ப்பதற்காக தமது உற்பத்தி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டால் தனது கார் உற்பத்தி நிறுவனமே இழுத்து மூடப்படும் என்று அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். அமெரிக்காவுக்கு அடுத்ததாக மின்சாரக் கார்கள் பயன்பாட்டில் சீனா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.