சீனா எந்த நேரத்திலும் ஒரு போரை எதிர்கொள்ளத் தயாராகிறதா ? நாட்டைப் பாதுகாக்கத் தயாராகுங்கள் என தனது மக்களுக்கு சீன அதிபர் எச்சரிக்கை .

உலகம் . March, 15 2021

news-details

சீனா எந்த நேரத்திலும் ஒரு போரை எதிர்கொள்ளத் தயாராகிறதா ?
நாட்டைப் பாதுகாக்கத் தயாராகுங்கள் என தனது மக்களுக்கு சீன அதிபர் எச்சரிக்கை .

iTamilWorld: 12/3/2021: கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் பேசிய சீன அதிபர் ஜி ஜின் பிங் நாட்டின் இறையாண்மையையும் நாட்டையும் பாதுகாக்கத் தயாராக இருங்கள் என தனது இராணுவத்துக்கும் நாட்டு மக்களுக்கும் எச்சரித்துள்ளார். சீனாவுக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றசாட்டுகள், அண்டை நாடுகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அல்லது உரிமை கொண்டாடுதல், இந்தியா உட்பட மற்ற நாடுகளுடனான எல்லைப் பிரச்சனைகள் மற்றும் கொரோனா விடயத்தில் சீனாவின் பங்கு என்பவற்றால் உலக நாடுகள் சீனாவை ஒரு கை பார்க்கும் நிலையில் உள்ளன. இவற்றில் சில ஐக்கிய நாடுகள் சபையிலும் எதிரொலிக்கின்றன. பொருளாதார நாடுகளின் பொருளாதாரத்தை வீழ்த்தி தனது பொருளாதாரத்தை விழவிடாமல் செய்யும் முயற்சிகளில் சீனா தந்திரமாகச் செயல்படுகிறது.

இந்த நிலையில் சீனா திரும்பிய பக்கமெல்லாம் எதிரிகளை சம்பாதித்து வைத்திருக்கிறது. இந்த அச்சத்தின் காரணமாகத் தான் சீன அதிபர் எந்த நேரத்திலும் போர் நிலையில் சீனாவை வைத்திருக்கும் முடிவை எடுத்திருக்கிறார். இது எங்குதான் போய் முடியுமோ என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்,