அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல்; ஈராக் விமானப்படைத் தளத்தில் 10 ரொக்கெட் தாக்குதல் : அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரானின் பதிலடியா ?

உலகம் . March, 05 2021

news-details

அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல்; ஈராக் விமானப்படைத் தளத்தில் 10 ரொக்கெட் தாக்குதல் : அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரானின் பதிலடியா ?

iTamilWorld: 4/3/2021: ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத்தளத்தில் இன்று 10 ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஈராக்கின் மேற்குப் பகுதியில் உள்ள அல் அசாத் என்ற அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் விமானத் தளத்தில்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்படுள்ளது.

இந்தத் தாக்குதலில் படையினருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் அங்கு ஒப்பந்த ஊழியராக இருந்த ஒருவர் இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட அதிர்சியினால் ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.

ஈராக்கில் இஸ்லாமிய அரசு என கூறிக்கொண்டு ஈராக்கியப் படைகளுக்கு எதிராகப் போராடும் ஜிகாதி குழுவுக்கெதிரான நடவடிக்கைகளுக்கு உதவும் முகமாக அமெரிக்கப் படைகள் அங்கு உள்ளனர். மொத்தம் 25000 அமெரிக்கப் படைகள் அங்கு உள்ளனர்.

அண்மையில் பெப்ரவரி மாதத் தொடக்கத்தில் சிரியாவின் இர்பி பகுதியில் உள்ள அமெரிக்கா மற்றும் கூட்டுப்படைகள் மீது ஈரானிய ஆதரவு போராளிக்குழுக்கள் ரொக்கெட் குண்டுத்தாக்குதலை நடத்தியிருந்தது. அதில் ஒரு ஒரு ஒப்பந்தத் தொழிலாளி கொல்லப்பட்டார். அமெரிக்கப் படைவீரர் ஒருவரும் மேலும் 4 பேரும் படுகாயமடைந்தனர் . இதற்கு முன்பும் ஈராக்கில் அமெரிக்கத் தூதரகம் மற்றும் பல்வேறு நாடுகளின் தூதரங்கள் அமைத்துள்ள பகுதியான அமெரிக்க படைத்தளம் இருக்கும் பகுதியிலும் ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவற்றுக்குப் பதிலடியாக முதல் இராணுவ நடவடிக்கைக்கு புதிய அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். இதன்படி ஈரானிய போராளிக்குழுக்கள் மீது அமெரிக்கப் படைகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குறைந்தது 22 பேராவது கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிய வருகிறது. இவற்றுக்கு பதிலாகத் தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.