மியன்மாரில் இராணுவ ஆட்சி: ஆங் சான் சூச்சி உட்பட அரசியல் தலைவர்கள் கைது.

உலகம் . February, 02 2021

news-details

மியன்மாரில் இராணுவ ஆட்சி: ஆங் சான் சூச்சி உட்பட அரசியல் தலைவர்கள் கைது.

iTamilWorld: 1/2/2021: மியன்மார் என்ற முன்னாள் பர்மா நாட்டில் அந்த நாட்டின் இராணுவம் ஜனநாயக ஆட்ச்சியை ரத்து செய்து அந்நாட்டின் ஆட்ச்சியைக் கைப்பற்றியுள்ளது. அண்மையில் நடந்த தேர்தலின் பின் தேர்தல் முறைகேடுகள் நடந்ததாக இராணுவம் குற்றம் சாட்டியபடி இருந்தது. அந்நாட்டின் ஆடசித்தலைவர் ஆங் சான் சூச்சியின் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதை இராணுவம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அரசுக்கும் இராணுவத்துக்கும் இடையில் பதட்டம் நிலவி வந்தது. தற்போது ஆங் சான் சூச்சி உட்பட அனைத்து அரசியல் தலைவர்களையும் கைதுசெய்த இராணுவம் அந்நாட்டின் ஆட்சியைத் தன் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. அத்துடன் அந்நாட்டின் முக்கிய கேந்திர நிலையங்களில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது . இராணுவம் ஆட்ச்சியை ஒரு வருடத்துக்கு நீடிப்பதாக அறிவித்துள்ளது.
முன்பும் அங்கு இராணுவ ஆட்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.