முகநூல் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் க்கு கெடுக்காலம்; ஜோ பைடன் கையில் எடுக்கும் ஆயுதம்.

உலகம் . January, 29 2021

news-details

முகநூல் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் க்கு கெடுக்காலம்; ஜோ பைடன் கையில் எடுக்கும் ஆயுதம்.

iTamilWorld: 27/1/2021: முகநூல் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் உலகின் மிகப்பெரிய பணக்காரரும் செல்வாக்கு மிக்கவராகவும் இருக்கிறார். அவர் 2017 ஆண்டில் அமெரிக்க மக்கள்முன் தன்னுடைய விருப்பம் ஒன்றைத் தெரிவித்தார். அதாவது தான் அமெரிக்கா மக்களைச் சந்திக்க வேண்டும் 50 மாநிலங்களிலும் உள்ள அமெரிக்கர்களிடம் அவர்களின் தொழிற்துறைகளில் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் மற்றும் வாழ்கை முறைகள் என்பவை பற்றி உரையாடவேண்டும் என்று தெரிவித்திருந்தார். இது 2020 ஜனாதிபதி தேர்தலைக் குறிவைத்து மேற்கொண்ட திட்டம் தான் என்பது வெளிப்டையாகப் பேசப்பட்ட விடயம். இந்த விடயம் ஜோ பைடனின் வருகைக்கு ஒரு சவாலான விடயமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
அதே வேளையில் இந்தியாவில் வாட்ஸ் அப் மூலம் பரப்பப்பட்ட வதந்திகளால் நடைபெற்ற கொலைகளுக்கும், க்யூ அனான் அண்ட் பிரவுட் பாய்ஸ் என்கிற வலதுசாரி இயக்கங்களுக்கு தாளமிட்டட காரணத்தாலும், மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்களின் இன அழிப்புக்கு உதவியாக இருந்தாகவும், கேம்பிரிட்ஜ் அனலிடிக சம்பவத்துக்கு காரணமாகவும் இருந்தார் என்ற குற்றசாட்டுகள் அவர் முன் உள்ளன. இதன் காரணமாகவும் புதிய அதிபர் இந்த முந்நூல் நிறுவனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் தீர்மானத்தில் இருப்பதாகத் தெரியவருகிறது.