ரஷியாவை எச்சரித்த புதிய அதிபர் ஜோ பைடன்.

உலகம் . January, 27 2021

news-details

ரஷியாவை எச்சரித்த புதிய அதிபர் ஜோ பைடன்.

iTamilWorld: 27/1/2021: புதிய அதிபராக ஜோ பைடன் பதிவியேற்றபின் உலகத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு வருகிறார். அவருக்கும் உலகத் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து சொல்லிவருகின்றனர். அவர் முதல் தொடர்பு கொண்ட நாட்டுத் தலைவர் கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ரூடோ ஆவார். தொடர்ந்து அவர் பேசிய உலகத் தலைவர்களில் ரஷிய அதிபர் புட்டின் னும் ஒருவர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு தொடர்பில் எச்சரிக்கை விட்டார். அதேவேளையில்
ரஷியாவில் தற்போது அந்நாட்டின் எதிர்க்கடசித் தலைவரை புட்டின் அரசு கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளது . இந்த செயல் உலகநாடுகள் மத்தியில் மனித உரிமைமீறல் என்று கண்டனம் தெரிவித்து வருகின்றன. ரஷியாவின் ஜனநாயக விரோத செயலை பதிய அதிபர் ஜோ பைடன் கண்டித்தார். இன்னோரன்ன பல விடயங்களில் நாங்கள் தொடர்ந்து பேசவேண்டும் என்று ஜோ பைடன் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது .