அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியானார் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன்; இந்தியத் தமிழ் -ஆபிரிக்க வம்சாவளி வந்த கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம். பல அடுக்குப் பாதுகாப்புக்கு மத்தியில் பதவியேற்பு.

உலகம் . January, 22 2021

news-details

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியானார் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன்; இந்தியத் தமிழ் -ஆபிரிக்க வம்சாவளி வந்த கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம். பல அடுக்குப் பாதுகாப்புக்கு மத்தியில் பதவியேற்பு.

iTamilWorld: 20/1/2021: அமெரிக்காவின் 46வது அதிபராக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும் , துணை அதிபராக இந்தியத் தமிழ்-ஆபிரிக்க வம்சாவளியில் வந்தவருமான செனட்டர் கமலா ஹரிஸ் துணை அதிபராகவும் இன்று பகல் பதவியேற்றனர். இந்தப் பதவியேற்பு விழாவிற்கு ட்ரம் இன் துணை அதிபர் மைக் பென்ஸ், முன்னாள் அதிபர்கள் பராக் ஒபாமா, பில் கிளிண்டன் , ஜோர்ஜ் புஷ் ஆகியோர் தத்தம் மனைவியருடன் அதாவது முன்னாள் முதல் பெண்மணிகளுடன் கலந்து கொண்டனர். பிரபல சினிமா நடிகர் ரொம் ஹங் அறிவிப்பாளராகவும், பிரபல பாடகி லேடி காகா அமெரிக்க தேசிய கீதத்தை இசைப்பவராகவும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.