அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் பதவியேற்று சில மணி நேரங்களில் மின்னல்வேக ஆணைகள்

உலகம் . January, 22 2021

news-details

அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் பதவியேற்று சில மணி நேரங்களில் மின்னல்வேக ஆணைகள்

iTamilWorld: 21/1/2021: அமெரிக்காவின் 46வது அதிபராகப் பதியேற்றார் ஜோ பைடன். துணை அதிபர் கமலா ஹரீசும் பதவியேற்றார். ஜோ பைடன் பதவியேற்று சில மணி நேரங்களில் மின்னல் வேகத்தில் புதிய ஆணைகளில் கையெழுத்திட்டார். இதுவரை பதவியேற்ற முதல் நாளில் அதிக ஆணைகளில் கையெழுத்திட்ட அதிபர் ஜோ பைடன் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 15 ஆணைகளில் அவர் கையெழுத்திட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. முன்னைய அதிபர்களில் பராக் ஒபாமா 9, டொனால்ட் ட்ரம் 8, பில் கிளிண்டன் 3, ஜோர்ஜ் புஷ் 2 என ஆணைகளில் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் கையெழுத்திட்ட உத்தரவுகளில், ட்ரம் இனால் ரத்து செய்யப்பட்ட பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைதல் , ட்ரம் அனுமதித்த, கீ ஸ்ரோன் பைப் லைன் என்கிற குழாய் மூல பெற்றோல் விநியோகத் திட்டத்தை நிறுத்துதல், கொரோனா வைரஸ் க்கு எதிராக எல்லா அமெரிக்கர்களும் முகக்கவசம் அணியவேண்டும், ட்ரம் இனால் தடை விதிக்கப்பட்ட சில முஸ்லீம் நாடுகளுக்கான தடைகளை நீக்குதல், மெக்ஸிகோ-அமெரிக்க எல்லை வேலிக்கான நிதியை முடக்குதல், இனப்பாகுபாடு பாலின சமத்துவம் பற்றிய உத்தரவுகள், உலக சுகாதார நிறுவனத்துடன் பழையபடி இணைத்து செயல்படுதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இணைக்க அலுவலகம் அமைத்தல் என்பன இவற்றுள் முக்கியமானவையாகும் .