அமெரிக்காவில் போர்சூழல் நடவடிக்கைகள்; 50 மாநிலங்களிலும் பாதுகாப்புப் படையினர் முற்றுகை. ஆயுதப்புரட்சி நடக்கலாம் என எச்சரிக்கை .

உலகம் . January, 18 2021

news-details

அமெரிக்காவில் போர்சூழல் நடவடிக்கைகள்; 50 மாநிலங்களிலும் பாதுகாப்புப் படையினர் முற்றுகை. ஆயுதப்புரட்சி நடக்கலாம் என எச்சரிக்கை .

iTamilWorld: 17/1/2021: அமெரிக்காவில் கடந்த 6ம் திகதி காங்கிரஸ் கட்டடத்தில் நடந்த வன்முறைத் தாக்குதல்களைத் தொடர்ந்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனிலுள்ள முக்கிய அரச கட்டடங்களும் 20ம் திகதி ஜோ பைடனும் கமலா ஹரீசும் பதவியேற்கவுள்ள பகுதியெல்லாம் பாதுகாப்புப் படையினர் வசம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதே போல் அமெரிக்காவின் அனைத்து 50 மாநிலங்களிலும் உள்ள முக்கிய நிலைகளைப் பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்துள்ளனர். எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற அச்சத்தில் அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகள் உள்ளன. அமெரிக்காவின் உளவுத்துறை மற்றும் போலீசார் நடந்த வன்முறைகள் தொடர்பில் நூற்றுக்கணக்கானவர்களைக் கைது செய்துள்ளது. மேலும் 15000 மேற்பட்ட தரவுகள் ஆதாரங்கள் அவர்கள் வசம் உள்ளதாகவும் அவற்றின் அடிப்படையில் கைதுகள் தொடரும் என்றும் தெரிவிக்ப்பட்டுள்ளது. ஜோ பைடனின் பதவியேற்பைத் தடுப்பதற்கு ஆயுதமேந்திய ட்ரம் ஆதரவாளர்கள் புரட்சி செய்யக்கூடும் என்ற அச்சமும் பாதுகாப்புப் படையினரிடையே உள்ளது என்று அறியப்படுகிறது.