மலேசிய மாமன்னர் அவசரநிலை பிரகடனம்; இது இராணுவப் புரட்சியல்ல என்று தெரிவிப்பு.

உலகம் . January, 14 2021

news-details

மலேசிய மாமன்னர் அவசரநிலை பிரகடனம்; இது இராணுவப் புரட்சியல்ல என்று தெரிவிப்பு.

iTamilworld: 13/1/2021: மலேசியாவிலும் கொரோனா வைரஸ் பரவல் 2வது அலை மிகமோசமாகப் பரவி வருகின்றது. இதனால் அதிருப்தி அடைந்த அந்நாட்டு மாமனார் சுல்தான் அப்துல்லா ஹாசி அஹமட் ஷா அவசரநிலையைப் பிரகடனம் செய்துள்ளார். நேற்று 12/1/2021 காலை இந்த அறிவிப்பு மாமன்னர் மாளிகையிலிருந்து வெளியிடப்பட்டது. இந்த அவசரகாலநிலை ஆகஸ்ட் 1ம் திகதிவரை நீடிக்கும் என்று அதில் குறிப்பிடப்படுள்ளது. இந்த நடவடிக்கை இராணுவப் புரட்ச்சி அல்ல என்றும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கை என்றும் நாட்டில் ஊரடங்கு அமூல் படுத்தப்படமாட்டாது என்றும் மலேசியப் பிரதமர் மொகிதீர் யாசின் தெரிவித்தார்.
மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் வழமையான பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படாது செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.