டொனால்ட் ட்ரம் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2 வது முறையாக நிறைவேற்றம். அவரது கடசியினர் சிலரும் ஆதரவு ; செனட் சபையில் நிறைவேறினால் தான் முழு வெற்றி.

உலகம் . January, 14 2021

news-details

டொனால்ட் ட்ரம் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2 வது முறையாக நிறைவேற்றம். அவரது கடசியினர் சிலரும் ஆதரவு ; செனட் சபையில் நிறைவேறினால் தான் முழு வெற்றி.

iTamilWorld: 13/1/2021: கடந்த 6ம் திகதி அமெரிக்காவின் தலைநகரில் டொனால்ட் ட்ரம் ஆதரவாளர்களினால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட ஐவர் பலியானதும் பலர் காயமடிந்ததும் குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து, வரும் 20ம் திகதி அவர் பதவியிலிருந்து வெளியேறவுள்ள சூழ்நிலையில் தொடர்ந்தும் பதிவியிலிருந்தால் மேலும் வன்முறைகளுக்கு அவர் தூபமிடலாம் மற்றும் ஜோ பைடனின் பதவியேற்பின்போது தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் போன்ற காரணங்களுக்காக, அவரை உடனடியாகப் பதவியை விட்டு அகற்ற துரித நடவடிக்கைகளை எடுத்துவருகிறது அமெரிக்க நாடாளுமன்றமும் செனட் சபையும். டொனால்ட் ட்ரம் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு அவரது கட்சியான குடியரசுக் கட்சியினர் சிலரும் ஆதரவு வழங்கியிருந்தனர்.
13/1/2021 இன்று மாலை டொனால்ட் ட்ரம் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 232 வாக்குகளால் நிறைவேறியது. எதிரான வாக்குகள் 197 ஆகும். தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் 10 பேர் டொனால்ட் ட்ரம் இன் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர். அடுத்ததாக இந்தத் தீர்மானம் செனட் சபையிலும் நிறைவேற்றப்பட வேண்டும். செனட் சபை டோன்லட் ட்ரம் இன் அதாவது குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதில் உள்ள சிலரது ஆதரவும் இருந்தால் மட்டுமே இத்தீர்மானம் முழுவேற்றி அடையும். அதுவும் செனட் சபை வரும் 19ம் திகதியை கூடவுள்ளது. மறுநாள் ஜோ பைடன் பதவியேற்கிறார். என்னதான் இருந்தாலும் சட்டச் சிக்கல்களும் அதிகாரச் சிக்கல்களும் நிறைந்த அமெரிக்காவில் நடப்பைவையெல்லாம் விசித்திரமாகத்தான் உள்ளன.