உலகம் . January, 13 2021
கடுமையான கட்டுப்பாடுகளுக்கு நிர்பந்திக்கப்படும் பிரித்தானிய அரசு; பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை.
iTamilWorld: 13/1/2021: பிரித்தானியாவில் ஒருபக்கம் தடுப்பூசி போடும் செயல்திட்டத்தில் இறங்கியிருக்கின்ற வேளையில், கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி பத்தாயிரம் மடங்குகளில் மக்கள் தொற்றுக்குள்ளாவதும் ஆயிரக்கணக்கில் மக்கள் பலியாகிக்கொண்டிருக்கும் நிலையில், பிரித்தானிய அரசு செய்வதறியாது திணறிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவைப் போல பிரித்தானியர்களும் அரசினதும் மருத்துவத்துறையினதும் எச்சரிக்கைகளை மீறி நடப்பதினால் தான் இப்பேரழிவுகளுக்கும் காரணமாக இருக்கிறது. அதனால், பிரித்தானிய அரசு கடுமையான விதிகளை அறிவித்து வருகின்றது. மீறுபவர்கள் மீது கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.