டொனால்ட் ட்ரம் இன் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது; மீண்டும் தேர்தலில் போட்டியிடும் அரிய வாய்ப்பை இழந்தார். அவரைப் பதவியைவிட்டு பலவந்தமாக வெளியேற்றத் தீர்மானம்.

உலகம் . January, 08 2021

news-details

டொனால்ட் ட்ரம் இன் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது; மீண்டும் தேர்தலில் போட்டியிடும் அரிய வாய்ப்பை இழந்தார். அவரைப் பதவியைவிட்டு பலவந்தமாக வெளியேற்றத் தீர்மானம்.

iTamilWorld: 7/1/2021: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம் 2020 அதிபர் தேர்தலில் தோற்றாலும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால், நேற்று வாஷிங்டனில் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நடந்த கலவரத்துக்கும் 4 பேரின் உயிரிழப்புக்கும் காயம் பட்டோர் நிலைக்கும் நட்டங்களுக்கும் அவரே காரணமாகி விட்டார். நான்கு பேரின் உயிரிழப்புக்கு அவர்மீது கொலைக் குற்றச்சாட்டு பதியப்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், கலவரக்காரர்கள் மத்தியில் தோன்றி அவர்களைத் தூண்டும் வகையில் அவர் பேசியது ஜனநாயக விரோத செயல் என்றும் கண்டிக்கப் படுகிறது. மேலும், கலவரக்காரர்களைத் தூண்டும் வகையில் காணொலிப் பதிவு ஒன்றையும் வெளியிட்டார். அவை ருவிட்டர், ஊடக தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடகங்களில் முடக்கப்பட்டன. உள்ளூர் பயங்கரவாதிகளின் அட்டகாசம் என்றும் இது அமெரிக்க ஜனநாயகத்துக்கு விழுந்த அடி என்றும் புதிதாக தெரிவுசெய்யப்பட்டு பதவியேற்கவுள்ள ஜோ பைடன் தெரிவித்தார்.
டொனால்ட் ட்ரம் இன் குடியரசுக்கு கட்சியைச் சேர்ந்தவர்களே அவரது செய்கையைக் கண்டித்தனர். அவர்களில் முன்னால் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்சும் ஒருவர். அமெரிக்க நாடாளுமன்றத் தலைவர் நான்சி பொலொஸ்கி, தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம் அமெரிக்க ஜனநாயகத்துக்கு விரோதமானவர் என்றும் அவர் பதவியில் தொடரத் தகுயற்றவர் என்றும் உப அதிபர் மைக் பென்ஸ் அமெரிக்க அரசியல்சாசன 25வது நடவடிக்கைப் பிரிவின்படி அவரை உடனடியாக பதவியை விட்டு தூக்கி ஏறிய வேண்டும் என்றும் அவ்வாறு செய்யத் தவறினால் நாடாளுமன்றம் உரிய நடவடிக்கையை எடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.