ஒரு கிராமத்துக்குள் புகுந்த பயங்கரவாதிகளால் 100 அப்பாவிமக்கள் படுகொலை; நையீரியாவில் பதறவைத்த கொடூரம்.

உலகம் . January, 07 2021

news-details

ஒரு கிராமத்துக்குள் புகுந்த பயங்கரவாதிகளால் 100 அப்பாவிமக்கள் படுகொலை; நையீரியாவில் பதறவைத்த கொடூரம்.

iTamilWorld; 6/1/2021: நையீரிய நாட்டில் கிராமம் ஒன்றில் அதிரடியாகப் புகுந்த பயங்கரவாதிகள் அக்கிராமத்திலிருந்த நூற்றுக்கு மேற்பட்ட மக்களைக் கொடூரமாகக் கொன்றுள்ளனர். அந்நாட்டிலுள்ள போகோ ஹராம் என்ற பயகரவாதக் குழுவே இந்த ஈவிரக்கமற்ற கொடூர கொலைவெறியாட்டத்தை நடத்தியுள்ளன. இக்குழுவினர் போலீசார் இராணுவம் உட்பட அப்பாவி மக்களையும் கொன்றோழித்து வருகின்றது. கடந்த சில வருடங்களுக்கு முன் ஒரு பெண்கள் பாடசாலையில் புகுந்த இந்தக் குழுவினர் 250 சிறுமிகளை கடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது. இதே வேளை இது அந்நாட்டு அரசுக்கும் இக்குழுவினருக்கும் இடையில் நடக்கும் அரசியல் நாடகம் என்றே கருதப்படுகிறது. அந்நாடு அரசோ உலக நாடுகளோ இந்த விடயத்தில் எதுவித அக்கறையும் இல்லாதிருப்பது வேடிக்கையாகவுள்ளது .