டொனால்ட் ட்ரம் இன் அதிகார துஷ்பிரயோகம் அம்பலம். வெளியாகியது மிரட்டல் ஒலிப்பதிவு .

உலகம் . January, 06 2021

news-details

டொனால்ட் ட்ரம் இன் அதிகார துஷ்பிரயோகம் அம்பலம். வெளியாகியது மிரட்டல் ஒலிப்பதிவு .


iTamilWorld: 4/1/2021: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம் அண்மையில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளை தனக்குச் சாதகமாக அறிவிக்குமாறு, ஜோர்ஜியா மாநிலத்தின் உயர் தேர்தல் அதிகாரியிடம் உத்தரவிட்ட ஒலிப்பதிவு ஒன்று வெளியாகி அமெரிக்க மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், '' நான் 11780 வாக்குகளை பெற விரும்புகிறேன், அதற்குத் தேவையான வாக்குகளைக் கண்டுபிடித்து அறிவிப்பை மாற்றும் '' என்று தனது கட்சியான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜோர்ஜியா மாநிலதின் உயர் தேர்தல் அதிகாரியான பிராட் ரபேஸ்பேர்க்கரிடம் கூறியதாக அந்த ஒலிப்பதிவில் தெரிவிக்கப்படுகிறது .