வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறத்தயாராகும் டொனால்ட் ட்ரம் .

உலகம் . November, 25 2020

news-details

வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறத்தயாராகும் டொனால்ட் ட்ரம் .

iTamilWorld: 23/11/2020;
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வென்றதை ஒப்புக்கொள்ள மறுத்த டொனால்ட் ட்ரம் வேறுவழியின்றி வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறாதயாராகி வருகின்றார். உண்மையில் எந்த ஒரு தேர்தல் வரலாற்றிலும் தேர்தல் முடிவுகளை ஏற்று தோல்வியடைந்தவர் முதலிலும் வென்றவர் இறுதியாகவும் வாக்களித்த மக்களுக்கும் தமக்காக உழைத்தவர்களுக்கும் நன்றி சொல்லி உரையாற்றுவது வழமை . வரலாற்றில் டொனால்ட் ட்ரம் மட்டும் தான் தனது நிலை தெரிந்திருந்தும் தோல்வியை மறுத்து செயல்பட்டு வருகின்றார். புதிய அதிபர் 2021 தை மாதம் 20ம் திகதி அதிகார பரிமாற்றத்திற்கு குறிப்பிட்ட காலதிற்கு முன்பே அதிகார மட்டரீதியான பொறுப்பேற்றல் சந்திப்புகள் நடைபெற வேண்டும். இவற்றுக்கு தடையாக டொனால்ட் ட்ரம் இருந்துவருகிறார். அவரது செயல்கள் அவரது எதிர்கால அரசியல் வியாபார வாழ்வுக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என்பதை அவர் உணரத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. ஒருபக்கம் தேர்தல் முடிவுகளை எதித்துக்கொண்டே மறைமுகமாக வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறத் தயாராகி வருகின்றார்.