டொனால்ட் ட்ரம் தொடர்ந்து அதிபராக நீடடிக்க பகீரதப் பிரயத்தனம்.

உலகம் . November, 24 2020

news-details

டொனால்ட் ட்ரம் தொடர்ந்து அதிபராக நீடடிக்க பகீரதப் பிரயத்தனம்.

iTamilWorld: 22/11/2020;
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம் 2020 அதிபர் தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்ததை ஏற்றுக்கொள்ளாத நிலையில் ஜோ பைடனின் வெற்றியைத் தடுக்க தபால் மூல வாக்குகள் செலுத்தப்பட்ட வகையில் மோசடிகள் நடந்ததாகக் கூறி அவை செல்லுபடியற்றவை என்று அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவரது குற்றச்சாட்டுகளில் எதுவித ஆதாரமும் இல்லை என்று நீதிபதி நிராகரித்தார். டொனால்ட் ட்ரம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட 2016 இல் வென்ற மாநிலமான பென்சில்வேனியா மாநிலத்தில் ஏற்பட்ட தோல்வியை டொனால்ட் ட்ரம் மினால் தாங்க முடியவில்லை. இதே போன்றே ஜோர்ஜியா மாநிலத்திலும் நடந்தது. அங்கும் அவரது வழக்கு நிராகரிக்கப்பட்டது. இதேபோன்று வேறு சில மாநிலங்களிலும் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி தனது ஆட்சியிலேயே தனக்கெதிராக சதி நடந்தது என்ற வேடிக்கையான குற்றசாட்டுகள் மூலம் பல முடுக்கடைகளைப் போட்டு தொடர்ந்தும் தான் அமெரிக்காவின் 46வது அதிபராகப் பதவியில் இருக்க முயற்சி செய்கிறார். இது எங்கே போய் முடியும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். அமெரிக்க சட்ட விதிகளின்படி எதிர்வரும் 2021 தைமாதம் 20 ம் திகதி புதிய அமெரிக்க அதிபர் பதவியேற்றே ஆகவேண்டும்.