வரும் மார்கழி நடுப்பகுதியில் கொரோனாத் தடுப்பு மருந்து தயார். உலகம் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்புக்கு முடிவு.

உலகம் . November, 23 2020

news-details

வரும் மார்கழி நடுப்பகுதியில் கொரோனாத் தடுப்பு மருந்து தயார்.
உலகம் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்புக்கு முடிவு.

iTamilWorld: 22/11/2020:
அமெரிக்காவில் வரும் மார்கழி (December) 11ம் திகதியளவில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து தயாராகிவிடும் என்று அமெரிக்க தடுப்பு மருந்து திட்டத் தலைவர் மான்செவ் சலூஸி தெரிவித்துள்ளார். பலகட்ட ஆய்வுகளின் பின்னர் இந்தத் தடுப்பு மருந்து தயார்நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. உலகில் தொற்றுகளிலும் மரணங்களிலும் அமெரிக்கா தான் முதலிடத்தில் இருக்கிறது என்பது யாவரும் அறிந்ததே. இதுவரை அமெரிக்காவில் 12 மில்லியன் மக்கள் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகியும் இரண்டு லட்சத்து 55 ஆயிரம் பேர் பலியாகியுமுள்ளனர். அமெரிக்க மருந்து நிறுவனங்களான பயோ என்டேக் மற்றும் பைசர் ஆகிய இரண்டு நிறுவனக்களினதும் மருந்துகளை மக்களின் பாவனைக்குக் கொண்டுவருவதற்கு அமெரிக்க மருத்துவத் துறையின் அனுமதிக்காக மருத்துவ அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
ஒருவருக்கு இரண்டு துளி மருந்துகள் இருவார இடைவெளியில் போடப்படவேண்டும். அதற்கேற்ப 50 மில்லியன் மருந்துகளைத் தயாரிக்க குறிப்பிட்ட நிறுவனங்கள் தயாராகி வருகின்றன,