தனது தோல்வியை ஒத்துக்கொள்ளாத டொனால்ட் ட்ரம் தான் நியமித்த தேர்தல் அதிகாரியைப் பதவி நீக்கம் செய்தார்.

உலகம் . November, 20 2020

news-details

தனது தோல்வியை ஒத்துக்கொள்ளாத டொனால்ட் ட்ரம் தான் நியமித்த தேர்தல் அதிகாரியைப் பதவி நீக்கம் செய்தார்.

iTamilWorld: 18/11/2020: அமெரிக்க அதிபர் தேர்தலில் 46வது அதிபரைத் தேர்வுசெய்யும் தேர்தலில் குடியரசுக் கடசியின் சார்பில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம் ஜனநாயகக் கடசியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் உப அதிபர் ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார். இதுவரை உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியிடப்படாவிட்டாலும் இதுவரை உறுதிப்படுத்தப்பட முடிவுகளின்படி ஜோ பைடன் வெற்றி பெறவேண்டிய 270 எலோக்டோரல் வாக்குகளுக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றதால் அவருடைய வெற்றி உறுதியானது. ஆனால், இந்தத் தோல்வியை ஏற்றுக்கொள்ளாத டொனால்ட் ட்ரம் சட்ட ரீதியான எதிர்செயல் வினையாற்றிக் கொண்டிருக்கிறார். பெரும்பாலான வழக்குகளில் தோல்வியும் அடைந்திருக்கிறார். அதேநேரத்தில், தொடர்ந்தும் இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடந்துவிட்டதாக ஆதாரமில்லாத குற்றசாட்டுகளை அடுக்கிக்கொண்டே இருக்கிறார். அவருடைய குற்றசாட்டுக்களை மறுக்கும் வகையில் மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் பேசியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த டொனால்ட் ட்ரம் அவரைப் பதவி நீக்கம் செய்துள்ளார். கிறிஸ் கிரேப்ஸ் என்ற அதிகாரி தான் அவர். அவர் டொனால்ட் ட்ரம் இனால் பதவியில் அமர்த்தப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.