புதிய அமெரிக்க அதிபரின் முன்னாலுள்ள முக்கிய சவால்கள். ஜோ பைடன் அணியினர் தீவிர ஆலோசனைகள்.

உலகம் . November, 11 2020

news-details

புதிய அமெரிக்க அதிபரின் முன்னாலுள்ள முக்கிய சவால்கள்.
ஜோ பைடன் அணியினர் தீவிர ஆலோசனைகள்.

iTamilWorld: அண்மையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் முன் பலதரப்பட்ட பணிகள் நிவர்த்தி செய்யப்படுவதற்காக காத்திருக்கின்றன. அதில் முதல் பணியாக இருப்பது கொரோனா வைரஸ் க் கட்டுப்படுத்துவதாகும் .
அதற்கென தனிக்குழுவை அமைத்து செயல்முறைகளை துரிதப் படுத்தவிருப்பதாக ஜோ பைடனின் அணியினர் கூறியிருப்பதாக தெரிவைக்கப்படுகிறது. அமெரிக்காவில் தற்போதைய நிலையை மாற்றி பரிசோதனை எண்ணிக்கைகளை அதிகரிப்பதும் எல்லோரையும் முகக்கவசம் அணிய வலியுறுத்துவதும் முக்கியமான விடயமாகவும் தடுப்பூசி விடயத்தை வேகப்படுத்தி அமெரிக்க மக்களை பாதுகாப்பதும் அதிமுக்கியமான பணியாக முன்னெடுக்கப்படவிருக்கிறதாம் .

அத்துடன், அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம் காலத்தில் தலைவிரித்தாடிய இனத்துவேச நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது, பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுகளைக் கண்டுபிடிப்பதிலும், பருவநிலை மாற்றங்கள் தொடர்பில் புதிய அணுகுமுறைகளைக் கையாளுவதிலும் அக்கறை செலுத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.