அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் அமெரிக்க வரலாற்றில் அதிக வாக்குகளுடனும் அதிகூடிய வயதிலும் ஜோ பைடன் : இந்திய தமிழ்ப் பெண்மணி கமலா உப அதிபராகிறார். டொனால்ட் ட்ரம் தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுப்பு.

உலகம் . November, 07 2020

news-details

அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் அமெரிக்க வரலாற்றில் அதிக வாக்குகளுடனும் அதிகூடிய வயதிலும் ஜோ பைடன் :
இந்திய தமிழ்ப் பெண்மணி கமலா உப அதிபராகிறார். டொனால்ட் ட்ரம் தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுப்பு.

iTAMILWORLD: 7/11/2020: அமெரிக்காவின் அடுத்த அதாவது 46 வது அதிபராகிறார் முன்னாள் உப அதிபர் ஜோ பைடன். தேர்தலில் அதிபராகும் ஒருவர் பெறவேண்டிய எலெக்டோரல் கொலிக் வாக்குகள் 270 ஆகும். இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் ஜோ பைடன் பெற்ற வாக்குகள் 273, டொனால்ட் ட்ரம் பெற்ற வாக்குகள் 213. அமெரிக்காவின் தேர்தல் வரலாற்றில் பதவியேற்கும் அதிகூடிய வயதுடையவர் (77 வயது) என்ற பெருமையையும் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற சாதனையையும் உடையவராக ஜோ பைடன் திகழ்கிறார். தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம் இந்தத் தேர்தல் முறைகேடுகள் நிறைந்தது; தனக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் திருடப்பட்டு விட்டன என்ற குற்றசாட்டுகளுடன் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்து பல மாநிலக்களில் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்தவண்ணம் உள்ளார். சில மாநிலங்களில் அவரது வழக்குகள் ஆதாரமற்றவை என்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட்டு விட்டன.

இதே வேளையில் இந்திய தமிழ்த் தாய்க்கும் ஜமைக்கேன் தந்தைக்கும் பிறந்த செனட்டர் கமலா ஹாரில் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் உப அதிபராகிறார். செனட்டர் கமலா ஹரிஸ் அமெரிக்காவில் பிறந்து கனடா மொன்றியலில் உயர்கல்வி கற்றவர் என்பதும் அமெரிக்காவில் வழக்குரைஞராக தொழில் புரிபவராகவும், அமெரிக்க அரசியலில் ஆளுமை கொண்டவர் என்பதும் ஜனநாயகக் கட்சியில் 46 அதிபர் தேர்தலில் குதிப்பதற்காக போட்டியிட்டு பின்னர் பின்வாங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரும் 2021 தை மாதம் 21ம் திகதி அமெரிக்காவின் 46வது அதிபர் மற்றும் உப அதிபர் கமலா ஹரிஸ் பதவியேற்றதன் பின் ஏற்படப் போகும் மாற்றங்களை உலகம் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது.