அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஜோ பைடனா? டொனால்ட் ட்ரம்பா? இருவரும் கிட்டத்தட்ட சமநிலையில். அதிபரைத் தெரிவு செய்வதில் போர்க்களங்களாக மாறியுள்ள புளோரிடா, ஓஹியோ மற்றும் அயோவா மாநிலங்கள்.

உலகம் . November, 05 2020

news-details

அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஜோ பைடனா? டொனால்ட் ட்ரம்பா? இருவரும் கிட்டத்தட்ட சமநிலையில்.
அதிபரைத் தெரிவு செய்வதில் போர்க்களங்களாக மாறியுள்ள புளோரிடா, ஓஹியோ மற்றும் அயோவா மாநிலங்கள்.

iTamilWorld: 3/11/2020: அமெரிக்காவின் அடுத்த அதிபரைத் தேர்வுசெய்யும் அதிபர் தேர்தல் வரலாறு காணாத தேர்தல் களமாக மாறியுள்ளது. கருத்துக் கணிப்புகள் ஜோ பைடனுக்கு சாதகமாகக் கூறினாலும் கடந்த 2016 ஐப் போல் யார் வெல்வார் என்பதை அறுதியாகக் கூறமுடியாத நிலைமையே அமெரிக்க தேர்தல் வரலாறு உள்ளது.

தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமுன்னரே அடுத்த நான்கு ஆண்டுகளுக்கும் தான் தான் அதிபராகத் தொடர்வேன் என்றும் முடிவுகள் தவறாகும் பட்ஷத்தில் நீதிமன்றப் படிகளில் முடிவு காணப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதே நேரத்தில் ட்ரம் க்கு எதிரானவர்கள் வெள்ளைமாளிகையின் முன் கூடி ட்ரம் க்கு எதிரான கோஷங்களை முழங்கியவண்ணம் உள்ளனர் . வெள்ளைமாளிகையின் முன் ஏராளமான பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

டொனால்ட் ட்ரம் இந்த தேர்தல் களத்தில் போர்க்கள மாநிலங்களான புளோரிடா, ஓஹியோ மற்றும் அயோவா மாநிலங்களை வென்றார்.