பிரான்சில் தொடரும் கொலை வன்முறைகள்; அச்சத்தில் பிரான்ஸ் மக்கள் .

உலகம் . November, 02 2020

news-details

பிரான்சில் தொடரும் கொலை வன்முறைகள்; அச்சத்தில் பிரான்ஸ் மக்கள் .

அண்மையில் பிரான்சில் வரலாற்று ஆசிரியர் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டதன் பின்னர் வேறொரு சம்பவத்தில் நீஸ் நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் நடைபெற்ற தாக்குதலில் ஒரு பெண் உட்பட மேலும் மூவர் கொலைசெய்யப்பட்டமை தெரிந்ததே. தற்போது பிரான்சின் லியான் நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாதிரியார் ஒருவர் சுடப்பட்டுள்ளார் . அந்தப் பாதிரியார் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . துப்பாக்கிசூடு நடத்தியவர் பாதிரியாரைச் சுட்டுவிட்டு தப்பியோடிய குற்றவாளியைப் போலீசார் தேடிவந்தனர் . அந்தச் சூட்டு சம்பவத்தை பார்த்த மக்களின் சாட் சியங்களின் அடிப்படையில் போலீசார் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர்.
மேற்படி சம்பவங்களினால் பிரான்சிய மக்கள் தங்கள் பாதுகாப்பையிட்ட அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.