டொனால்ட் ட்ரம் தப்புவாரா? அடுத்த வாரம் தெரிந்துவிடும் .

உலகம் . October, 30 2020

news-details

டொனால்ட் ட்ரம் தப்புவாரா? அடுத்த வாரம் தெரிந்துவிடும் .

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் அடுத்தவாரம் (3/11/2020) நடைபெறவுள்ள சூழ்நிலையில் அமெரிக்காவின் தற்போதைய அதிபர் தொடர்ந்தும் பதவியில் நீடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கருத்துக்கணிப்புகள் என்ன சொன்னாலும் கடைசி நேர மாற்றங்கள் எப்படி முடிவுகளை மாற்றி அமைக்கும் என்பதே அரசியல் வல்லுனர்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
தற்போதுள்ள கருத்துக் கணிப்புகளின் படி தேசிய அளவில் ஜனநாயகக் கட்சியின் வேட்ப்பாளரான ஜோ பைடன் 51% (வீதத்தில்) முன்னணியிலும் குடியரசுக் கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடும் டொனால்ட் ட்ரம் 42% (வீதத்தில்) பின்தங்கியுமுள்ளார்.
இருப்பினும் இறுதி முடிவுகள் வரும்போது தான் யார் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி என்பது தெரியவரும்.