அமெரிக்காவில் 38 மாநிலங்களில் அதிகரித்துவரும் கொரோனா நோயாளிகள் வைத்தியசாலைகளில் அனுமதிகப்படும் அபாயம்.

உலகம் . October, 26 2020

news-details

அமெரிக்காவில் 38 மாநிலங்களில் அதிகரித்துவரும் கொரோனா நோயாளிகள் வைத்தியசாலைகளில் அனுமதிகப்படும் அபாயம்.

கொரோனாத் தொற்றுப் பரவ ஆரம்பித்த காலத்திலிருந்து முன்னணியில் இருக்கும் அமெரிக்காவில் இதுவரை 8,688,956 கொரோனாத் தொற்றுகளும் 225,051 மக்கள் பலியும் நடைபெற்றுள்ளது. தற்போது அமெரிக்காவின் 50 மாநிலங்களில் உள்ள 38 மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனாத் தொற்று நோயாளிகளின் வைத்தியசாலைகளில் அனுமதிகள் அமெரிக்காவிலும் உலகநாடுகளிலும் அச்சமூட்டுவதாக உள்ளது.
இதுவரை உலக நிலவரப்படி 42,912,830 தொற்றுகளும் 1,152,739 பலிகளும் பதியப்பட்டுள்ளன.
கடந்த 11ம் திகதியிலிருந்து 24ம் திகதி வரையும் அமெரிக்காவில் 872,442 கொரோனாத் தொற்றுகளும் 10,632 மக்கள் பலிகளும் பதிவாகியுள்ளன.