பிரான்சில் ஆசிரியர் தலை துண்டிப்பு : துண்டித்த 18 வயது வாலிபன் பொலிஸாரால் சுட்டுக்கொலை. கொள்ளப்பட வாலிபரின் குடும்பத்தினர் உட்பட 9 பேர் கைது.

உலகம் . October, 18 2020

news-details

பிரான்சில் ஆசிரியர் தலை துண்டிப்பு : துண்டித்த 18 வயது வாலிபன் பொலிஸாரால் சுட்டுக்கொலை. கொள்ளப்பட வாலிபரின் குடும்பத்தினர் உட்பட 9 பேர் கைது.

அண்மையில் பிரான்சில் முஸ்லிம் மதரீதியான ஒரு விடயத்தை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்ட காரணத்தால், ரஷியாவில் பிறந்து பிரான்சில் அகதியாக வாழும் 18 வயது செச்சென் என்ற இளைஞன், 47 வயதான படி என்ற வரலாற்று ஆசிரியரின் தலையைத் துண்டித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டான். அவனை தேடிச் சென்ற போலீசார் அவன் தப்பியோட முயன்றபோது அவனைச் சுட்டுக்கொன்றனர். தொடர்ந்து அந்த இளைஞனின் செயல் குறித்து விசாரணையை மேற்கொண்ட போலீசார் அவனது குடும்பத்தினர் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட ஆசிரியருக்கு மாணவர்கள் உருக்கத்துடன் தமது அஞ்சலியைத் தெரிவித்தனர்.