வடகொரியா அறிமுகப்படுத்திய ஏவுகணையால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்.

உலகம் . October, 14 2020

news-details

வடகொரியா அறிமுகப்படுத்திய ஏவுகணையால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்.

அண்மையில் வடகொரியா அறிமுகப்படுத்திய பெரிய பாலிஸ்டிக் ஏவுகணை உலகநாடுகளை வியப்புக்குளாக்கியுள்ளது . பிரமிப்பூட்டும் காட்சிகளுடன் உலகம் வியக்கும்வண்ணம், வடகொரியாவின் தொழிலாளர் கட்சியின் 75 ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரு இராணுவ அணிவகுப்பு நள்ளிரவில் நடத்தப்பட்டது . அதில் எதிர்பாராதவிதமாக தோன்றிய அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் தனது நாட்டின் போராட்டங்கள் குறித்து உருக்கமாக கண்கலங்கிப் பேசினார். அவரது உரையில் அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் பேசினார். இறுதியில் கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து தாக்கக்கூடிய ஏவுகணையான பெரும் பலிஸ்ட்டிக் ஏவுகணையை அறிமுகப்படுத்தப்பட்டது.
வடகொரியாவின் இந்தச் செயல் குறித்துப் பேசிய அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை நிபுணரான மெலிசா ஹன்ஹாம் , வடகொரியாவின் இந்த ஏவுகணை அமெரிக்காவுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கே அச்சுறுத்தலாக உள்ளது என்று தெரிவித்தார்.