வாக்குகள் மட்டும் அமெரிக்க அதிபரை தீர்மானிப்பதில்லை. 3 லட்சம் வாக்குகள் அதிகமாகப் பெற்ற ஹில்லாரி கிளின்டன் ஏன் அதிபராக முடியவில்லை?

உலகம் . October, 12 2020

news-details

வாக்குகள் மட்டும் அமெரிக்க அதிபரை தீர்மானிப்பதில்லை.
3 லட்சம் வாக்குகள் அதிகமாகப் பெற்ற ஹில்லாரி கிளின்டன் ஏன் அதிபராக முடியவில்லை?

அமெரிக்க அரசியல் சட்டங்களும் நடைமுறைகளும் சற்று விசித்திரமானவை. அங்கு நடைபெறும் அதிபர் தேர்தலும் சற்று வித்தியாசமானது. அந்த வகையில் ஏனைய ஜனநாயக நாடுகளில் நடைபெறுவது போன்று அந்தந்த நாட்டின் அதியுச்ச பதவியான ஜனாதிபதியையோ பிரதாமரையோ மக்கள் நேரடியாகத் தெரிவுசெய்ய முடியாது. அமெரிக்காவில் இன்றுவரை இரு பெரும் அரசியல் கட்சிகள் தான் மாறிமாறி ஆட்சிப் பீடம் ஏறிவந்துள்ளன. ஜனநாயகக்கட்சி , குடியரசுகட்சி ஆகிய இருபெரும் கட்சிகளே அவை.
நடைபெறும் அதிபர் தேர்தலில் அதிக வாக்குகள் பெறுபவர்தான் வெற்றி பெறுவார் என்பது இல்லை. 2016 இல் நடைபெற்ற அதிபர் தேத்தலில் டொனால்ட் ட்ரம் ஐ எதிர்த்துப் போட்டியிட்ட ஹில்லாரி கிளின்டன் 3 மில்லியன் அதிகமான வாக்குகளைப் பெற்றபோதும் அவர் அதிபராக முடியவில்லை. அதற்குக் காரணம் அங்குள்ள தேர்தல் முறைதான் . இரண்டு கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர் பெறும் எலக்டோரல் காலெஜ் வாக்குகள் தான் தீர்மானிக்கின்றன. மொத்தம் 538 எலக்டோரல் காலெஜ் வாக்குகளில் 270 அல்லது அதற்குமேல் பெறும் வேட்பாளர்தான் வெற்றிபெற்றவர் ஆவார்.