அமெரிக்க தேர்தல்களம்: துணை அதிபர் வேட்பாளர்கள் விவாதம்

உலகம் . October, 09 2020

news-details

அமெரிக்க தேர்தல்களம்: துணை அதிபர் வேட்பாளர்கள் விவாதம்

அமெரிக்கா அதிபர் தேர்தல் வேட்பளரான அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம் கொரோனாத் தொற்று உறுதியாகி தனிமைப்படுத்தலில் உள்ள நிலையில் நேற்று (7/10/2020) உப அதிபர் வேட்பாளர்களான மைக் பென்ஸ் சும் கமலா ஹாரிஸ் சும் தேசிய தொலைக்காட்சி நேர்நிலை விவாதத்தில் ஈடுபட்டனர். தற்போதைய துணை அதிபரான மைக் பென்ஸ் டொனால்ட் ட்ரம் இன் கொள்கைகளையே பறைசாற்றிக்கொண்டிருந்தார். அவரை எதிர்த்துச் சரமாரியான கருத்துக்களை முன்வைத்தார் கமலா ஹாரிஸ். 90 நிமிடம் நடைபெற்ற இந்த விவாதத்தில் கமலா ஹாரிஸும் தனது ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்ப்பாளர் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் இன் கொள்கைகளையே அடிப்படையாக வைத்து தனது விவாதத்தை முன்வைத்தார். இவ் விவாதத்தில் கொரோனா தொடர்பான நடைமுறைகள், நீதிபதி நியமனம், இனத்துவேச நடவடிக்கைகள் போன்றவை முக்கிய விவாதப் பொருளாக அமைந்தன.