டொனால்ட் ட்ரம் கொரோனத் தொற்று ஒரு நாடகமா? வலுக்கும் சந்தேகங்கள்.

உலகம் . October, 06 2020

news-details

டொனால்ட் ட்ரம் கொரோனத் தொற்று ஒரு நாடகமா? வலுக்கும் சந்தேகங்கள்.

கொரோனாத் தோற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுவந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம் மூன்று நாட்களில் சிகிக்சை முடிந்து வெள்ளைமாளிகைக்குத் திரும்பினார். அவருக்கு கொரோனாத் தொற்று உறுதியானத்திலிருந்து முன்னுக்குப்பின் முரணான செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. அவர் வைத்தியசாலையில் இருந்து எவரது உதவியுமின்றி இலாவகமாக நடந்து சென்று அமெரிக்க அதிபருக்கான உலங்குவானூர்தியான மரின் வன் இல் ஏறி ஒருசில நிமிடங்களில் வெள்ளைமாளிகையை சென்றடைந்தார்.
அமெரிக்காவில் இரண்டு லட்சத்து பத்தாயிரம் (210,000)மக்களின் மரணத்துக்கு காரணமான, 74 லட்ச்சத்து எண்பதினாயிரம் (7,480,000) தொற்றுகளுக்கும் காரணமான அமெரிக்க அதிபரின் நடவடிக்கைகள் காரசாரமான விமர்சனத்துக்குளான நிலையில் அவரது கொரோனாத் தொற்று நிலவரமும் அவரது நிலை பற்றிய முன்னுக்குப்பின் முரணான செய்திகளும் இது ஒரு தேர்தலில் தனக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்க மக்களின் அனுதாபத்தைப் பெற மேற்கொள்ளும் நாடகமா? என்ற கேள்வி அமெரிக்க மக்கள் மத்தியில் சந்தேகங்களை உருவாகியுள்ளது.