அமெரிக்க ஜனாதிபதி மருத்துவமனையில் அனுமதி. கொரோனாத் தொற்று உறுதி: அவரது துணைவியும் பாதிக்கப்படுள்ளார்.

உலகம் . October, 03 2020

news-details

அமெரிக்க ஜனாதிபதி மருத்துவமனையில் அனுமதி. கொரோனாத் தொற்று உறுதி: அவரது துணைவியும் பாதிக்கப்படுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம் கொரோனா வைரஸ் (கோவிட் -19) தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, மேலும் சிகிக்சை பெறும் பொருட்டு மரிலாண்டில் உள்ள வால்டர் ரீட் மருத்துவமனைக்கு உலங்கு வானூர்தி மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். 74 வயதாகும் அவர் அவரது உதவியாளர்களில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து டொனால்ட் ட்ரம் மற்றும் மெலானியா ட்ரம் இருவரும் கோவிட் -19 பரிசோதனை செய்தனர். அந்தப் பரிசோதனை முடிவுகளில் 74 வயதான அதிபருக்கும் அவரது துணைவியாருக்கும் தொற்று உறுதியானது. இதேவேளை அதிபருக்கு சற்று சளி , இருமலுடன் மூக்கரிப்பு உட்படக் காய்ச்சல் இருந்ததால், மருத்துவர்கள் அறிவுதலின்படி இராணுவ வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.

அதிபர் விரைவில் குணமாக வேண்டுமென்று அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஜோ பைடன், காங்கிரஸ் தலைவர் நான்சி பெலோஸ்க்கி, முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் அமெரிக்க அரசியல் பிரமுகர்கள் உட்பட உலகத் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.