அமெரிக்க அதிபர் தேர்தல் களம் : காரசார விவாதம்; ட்ரம்பின் நடவடிக்கைகளைக் கண்டித்த எதிரணி வேட்ப்பாளர் முன்னாள் உப அதிபர் ஜோ பைடன் .

உலகம் . October, 01 2020

news-details

அமெரிக்க அதிபர் தேர்தல் களம் : காரசார விவாதம்; ட்ரம்பின் நடவடிக்கைகளைக் கண்டித்த எதிரணி வேட்ப்பாளர் முன்னாள் உப அதிபர் ஜோ பைடன் .

எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம் ற்கும் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் ஆகிய இருவருக்குமிடையே நடைபெற்ற முதலாவது தொலைக்காட்சி விவாதம் இன்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் அமெரிக்க அதிபரின் கொரோனா , இனவேறுபாடு, நீதித்துறை விவகாரங்கள், பொருளாதார நடவடிக்கைகள் போன்ற விடயங்களில் கேள்வி பதிலும் நேரடி விவாதமும் நடைபெற்றது. இந்த விவாதங்களின் போது அமெரிக்கா இதுவரை சந்தித்திராத மோசமான அதிபர் ட்ரம் என்றும் அமெரிக்க மக்களின் 200,000 பேருடைய கொரோனா மரணங்களுக்கும் 700,000 மக்களுடைய கொரோனா பாதிப்புகளுக்கும் ட்ரம் தான் காரணமென்றும் மேலும் அமெரிக்க சாதாரண மக்களின் மருத்துவ காப்புறுதி விடயங்களின் அநியாயமாக நடந்து கொண்டாரென்றும் , கறுப்பின மக்களின் விவகாரங்களை இனத்துவேசமான தவறான முறையில் கையாண்டார் என்றும் டொனால்ட் ட்ரம் பின் தற்புகழ்ச்சிக் கருத்துக்களை எதிர்த்த ஜோ பைடன் அவர்கள் அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.