ஒரு மில்லியனைத் தொடும் கொரோனா மரணங்கள்; அமெரிக்காவில் மட்டும் 200,000 ஐத் தாண்டிய மரணங்கள்.

உலகம் . September, 25 2020

news-details

ஒரு மில்லியனைத் தொடும் கொரோனா மரணங்கள்; அமெரிக்காவில் மட்டும் 200,000 ஐத் தாண்டிய மரணங்கள்.

கொரோனா வைரஸ் தொடர்ந்தும் உலகம் முழுவதும் தீராத அச்சத்தை ஏற்படுத்தியவண்ணம் உள்ளது. இதுவரை உள்ள நிலவரப்படி உலகம் முழுவதும் உள்ள 188 நாடுகளில் 31 மில்லியன் தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதே நேரத்தில் மரண எண்ணிக்கைகள் ஒரு மில்லியனை நெருங்கிக் கொண்டுள்ளன.
தற்போது அமெரிக்காவில் 200,000 மக்களுக்கு மேல் பலியாகிவிட்டார்கள். முறையான கட்டுப்பாடுகளை அமெரிக்க மக்கள் கடைபிடிக்கவில்லையெனில் வருகிற 2021 தை மாதமளவில் 400,000 மக்கள் வரை மடியக்கூடுமென மருத்துவவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும், தற்போது கொரோனாத் தொற்றில் அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் இந்தியாவில் தொற்றுகள் வேகவேகமாக அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் தற்போது சராசரி ஒருநாளில் 70,000 மேற்பட்ட தொற்றுகள் பதியப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே , கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த நாடுகளில் இரண்டாவது அலை பாரிய சீரழிவுகளை மேலும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. தற்போது வைரஸ் தொற்றுப் பரிசோதனைகள் அதிகமாக மேற்கொள்ளப்பட்டாலும் பரிசோதிக்கப்படாத மக்கள் உலகம் முழுவதும் மூன்றில் இரண்டுக்கு மேற்பட்டவர்கள் இன்னும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.