கொரோனாவினால் 120 கோடி சிறுவர்கள் வறுமையின் பிடியில்.

உலகம் . September, 20 2020

news-details

கொரோனாவினால் 120 கோடி சிறுவர்கள் வறுமையின் பிடியில்.

கொரோனாத் தொற்று ஆரம்பமானது முதல் இன்றுவரை உலக அளவில் சுகாதாரம் ஊட்டசத்துள்ள உணவு மற்றும் தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் மேலும் 15 கோடி சிறுவர்கள் வறுமையின் பிடியில் தள்ளப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் தொகை 120 கொடியைத் தொட்டுள்ளது. 70 நாடுகளில் மேற்கொள்ளப்பட ஆய்வு முடிவுகள் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளன. இது உலக சிறுவர்கள் தொகையில் 45 வீதமாகும் . அத்துடன் அவர்களது கல்வி நிலை மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப்புடன் இணைந்து குழந்தைகளைப் பாதுகாப்போம் என்ற தொண்டு நிறுவனம் கோரோனாவுக்குப் பிந்திய சிறுவர்களின் நிலை பற்றி மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் இந்த உண்மைகள் வெளிவந்துள்ளன.