காட்டுத்தீயினால் அமெரிக்காவில் 30 ற்கு மேற்பட்டோர் பலி .

உலகம் . September, 14 2020

news-details

காட்டுத்தீயினால் அமெரிக்காவில் 30 ற்கு மேற்பட்டோர் பலி .

அமெரிக்காவின் மேற்கு கடற்கரை மாநிலங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 30ற்கு மேற்படுத்தவர்கள் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கும் காட்டுத்தீ அந்தந்த மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது.

ஒரிகான் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் 12ற்கு மேற்படட மக்களைக் காணவில்லை தெரிவிக்கப்படுகிறது. இங்கு அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. ஒரிகான், கலிபோர்னியா மற்றும் வாஷிங்ரன் மாநிலங்களில் கடந்த மூன்று வாரங்களாகப் பற்றி எரியும் காட்டுத்தீயினால் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் அழிந்துவிட்டன. ஆயிரக் கணக்கானவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர்.