சவூதி அரச குடும்பத்தில் அதிரடி மாற்றங்கள்; அதிகாரப் போட்டியின் விளைவு.

உலகம் . September, 02 2020

news-details

சவூதி அரச குடும்பத்தில் அதிரடி மாற்றங்கள்; அதிகாரப் போட்டியின் விளைவு.

சவூதி அரச குடும்பத்தில் அதிகாரப் போட்டி மற்றும் மறைமுக சதிகள் போன்ற விடயங்களுக்குப் பஞ்சமே இல்லை. அடிக்கடி அரச குடும்பத்தில் பதவிகளில் உள்ளவர்கள் கைது செய்யப்படுவதும் பதவி நீக்கப்படுவதும் சகஜமான செயல்பாடுகள் தான். சவூதியின் மன்னராக சல்மான் இருந்தாலும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தான் உண்மையில் சர்வ அதிகாரமும் படைத்த ஆட்சியாளர். முகமது பின் சல்மான் சவுதியில் புதிய அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி தனது அதிகார பலத்தை நிரூபித்து வருகிறார். அங்கு ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது அரச குடுப்பத்தைச் சேர்ந்தவரும் ஏமனில் சண்டையிட்டு வரும் சவூதி தலைமையிலான கூட்டுப் படைகளின் தளபதியுமான இளவரசர் பகாத் பின் துர்க்கி அப்பொறுப்பில் இருந்து தூக்கி எறியப்பட்டார். அதேவேளையில் துணை ஆளுநராக இருந்த அவரது மகனான அப்துல்லாசீஸ் பகாத்தும் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சவூதி மன்னரின் இளைய சகோதரர் இளவரசர் அகமது பின் அப்துலாசீஸ் மற்றும் முன்னாள் பட்டத்து இளவரசர் முகமது பின் நயீப் உள்ளிட்ட அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் மூவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.