அமெரிக்காவில் மேலும் ஒரு கருப்பினத்தவர் மீது தாக்குதல் ; மீண்டும் வெடிக்கும் வன்முறைகள்.

உலகம் . August, 28 2020

news-details

அமெரிக்காவில் மேலும் ஒரு கருப்பினத்தவர் மீது தாக்குதல் ; மீண்டும் வெடிக்கும் வன்முறைகள்.

அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஒருவர் கடந்த 23ம் திகதி ஞரயிற்றுக்கிழமை ஒரு காவல்துறை அதிகாரியினால் அவரது பிள்ளைகள் முன்பாக ஏழு முறை முதுகுக்குப் பின்னால் சுடப்பட்ட சம்பவம் மீண்டும் அமெரிக்காவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் விக்கன்ஸின் மாநிலத்தை சேர்ந்த ஜேக்கப் பிளேக் என்ற இளைஞரே இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காக்கினார். இந்த சூட்டு சம்பவத்தின் காணொலிக் காட்சி இணைய ஊடகங்களில் பரவலாகப் பகிர்ந்து பரவப் பட்டு வருகின்றது. தற்போது சுடப்பட்ட இளைஞர் உயிராபத்திலிருந்து மீண்டாலும் அவரால் முன்புபோல் சகஜமாக வாழமுடியாது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தின் பின் மீண்டும் கருப்பினதத்தவர்கள் வீதிகளில் இறங்கி போலீசாரின் அடக்குமுறைக்கெதிராக போராட்டம் நடத்திவருகின்றனர்.