ஈரான் மீது திட்டமிட்ட தாக்குதல்; அணு உலையில் தீ.

உலகம் . August, 24 2020

news-details

ஈரான் மீது திட்டமிட்ட தாக்குதல்; அணு உலையில் தீ.

கடந்த மாதம் ஈரான் நாட்டிலுள்ள நாடான்ஸ் என்ற அணுஉலையில் தீ விபத்து ஏற்பட்டது. இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்ற சந்தேகங்கள் சர்வதேச மட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இந்த தீ விபத்து ஒரு சைபர் தாக்குதலாக இருக்கலாம் என ஈரானிய அதிகாரிகள் கருத்தியிருந்தனர். அனால் கடந்த சில வாரங்களாக ஈரானிலுள்ள மின்சார மையங்களில் தீ விபத்து வெடிப்பு சம்பவங்கள் நடந்தபடியுள்ளன.
கடந்த மாத அணுஉலை சம்பவத்துக்கு காரணத்தைக் கண்டுபிடிக்க இரகசிய விசாரணைகளை முடிக்கிவிட்டனர். ஈரானின் அணு ஆயுத உற்பத்தி முயற்சிகளில் ஈடுபடுவதை அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பியன் யூனியனும் விருப்பவில்லை என்பது வெளிப்படையான உண்மை. ஈரானின் இந்த முயற்சிக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தும் ஈரான் அவற்றை அலட்சியம் செய்து அணு ஆயுத உற்பத்தியில் தொடர்ந்தும் ஈடுபட்டுக்கொண்டிருந்தது .

இந்த நிலையில் ஈரானின் அரசு செய்தி முகாமையாளரான இர்னா , அமெரிக்காவையோ இஸ்ரேலையோ நேரடியாகக் குற்றம் சாட்டாமல் எமது நாட்டின் எதிரி நாடுகளின் கைவரிசையாகத் தான் இருக்கும் என்பதைத் பூடகமாகத் தெரிவித்தார்.