நாசாவின் தலைசிறந்த விஞ்ஞானியாக ஒரு தமிழர் மெய்யப்பன். தமிழ்நாட்டில் தமிழ்மொழி வழியில் கற்று உயந்த பெருமகன்

உலகம் . August, 21 2020

news-details

நாசாவின் தலைசிறந்த விஞ்ஞானியாக ஒரு தமிழர் மெய்யப்பன். தமிழ்நாட்டில் தமிழ்மொழி வழியில் கற்று உயந்த பெருமகன்

உலகத் தமிழர்களை பெருமைப்பட வைக்கும் ஒரு தலைசிறந்த விஞ்ஞானி ஒரு தமிழர் என்பது பலருக்குத் தெரியாது. விஞ்ஞான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் உலகத்தையும் விண்வெளியையும் ஆளும் அமெரிக்காவின் நாசாவில் பல தமிழ் விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர் என்பது பலரும் அறியாத புதுமை. அந்த வகையில் நானோ தொழிநுட்பத் துறையில் சாதனைகள் புரிந்து கொண்டிருக்கும் தமிழரான மெய்யப்பன் அவர்கள் உலகமே வியந்து பார்க்கும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுமையமான நாசாவில் அதன் எதிர்காலத்தை நிருவகிக்கும் பொறுப்பில் கடந்த 24 ஆண்டுகளுக்கு மேல் அந்த நிலையத்தின் தலைசிறந்த விஞ்ஞானியாக உள்ளார்.

ஆச்சரியம் என்னவென்றால் அவர் ஆரம்பப் பள்ளிமுதல் உயர்கல்வி வரை தமிழ்நாட்டில் காரைக்குடியில் பிறந்த அவர் தமிழ்வழிக் கல்விமூலம் கற்றவர் என்பதே. தாயமொழி மூலம் கற்பவர்கள் உலக அரங்கில் வெற்றிபெற முடியாது என்ற வாதபிரதிவாதங்களுக்கு பதில் தருவதாகவே இதனைக் கருதமுடியும்.