ஐரோப்பா செல்ல முயன்ற கப்பல் நடுக்கடலில் மூழ்கி 45 பேர் பலி.

உலகம் . August, 21 2020

news-details

ஐரோப்பா செல்ல முயன்ற கப்பல் நடுக்கடலில் மூழ்கி 45 பேர் பலி.

லிபிய கடல் பிராந்தியத்தில் அகதிகளாக ஐரோப்பா செல்ல முயன்ற கப்பல் ஒன்று மூழ்கியதில் அதில் இருந்த ஐந்து குழந்தைகள் உட்பட 45 பேர் உயிரிழந்துள்ளனர் . இந்த ஆண்டு நடந்த மிகவும் மோசமான விபத்து இதுவென்று அறியப்படுகிறது. சுவாரா நகரின் கடற்கரைப் பகுதியில் 80 பேருடன் சென்ற இந்தக் கப்பலின் எஞ்சின் வெடித்ததைத் தொடர்ந்து இந்தக் கப்பல் மூழ்கத் தொடங்கியது. அவர்களில் 37 பேர் உள்ளூர் மீனவர்களால் மீட்கப் பட்டனர் என்றும் மிகுதிப்பேர் அநியாயமாகப் பலியாகினர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு லிபியாவிலிருந்து ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்றவர்களில் இந்த ஆண்டு இதுவரை 300 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில வருடங்களாக லிபிலியாவிலிருந்து தங்களை பாதுகாக்க ஐரோப்பாவுக்குள் நுழைய லிபிய மக்கள் முயன்று வருகின்றனர்.